[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

மண் வெட்டியால் மகனை கொன்ற தந்தை 

father-who-killed-his-son

ஓமலூர் அருகே சொத்தை பிரித்து கொடுக்க கேட்டு மது போதையில் வெட்ட முயன்ற மகனை தந்தையே அடித்து கொலை செய்தார். மகனை கொலை செய்த தந்தையை தாரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாராமங்கலம் பெருராட்சியின் நான்காவது வார்டு கீழ் சின்னாகவுண்டம்பட்டியில் வசிப்பவர் விவசாயி பொன்னுசாமி. இவருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது இளைய மகன் பொன்னுமணி. மைக் செட் வைக்கும் தொழில் செய்து வரும் இவருக்கு பிரியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பொன்னுமணி தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகறாரு செய்து வந்துள்ளார். இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மனைவி பிரியா இரண்டு குழந்தைகளுடன் சித்தனூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 

இந்தநிலையில் பொன்னுமணி தினமும் மதுபோதையில் வந்து தனது தந்தை பொன்னுசாமியிடம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு தகறாரு செய்து வந்துள்ளார். அப்போது தந்தை பொன்னுசாமி ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதால் தனது காலத்திற்கு பிறகு அண்ணன், தம்பிகள், அக்கா தங்கைகள் பிரித்துகொள்ளுமாறு கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு மிக அதிகமான மது போதையில் வந்த பொன்னுமணி தந்தை பொன்னுசாமியை நிலத்தை பிரித்து கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டி வந்துள்ளார். மேலும், தந்தையை வெட்டுவதற்கான முயற்சியுடன் அவரை விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை பொன்னுசாமி அருகே கிடந்த மண் வேட்டியை எடுத்து மகனின் தலையில் அடித்துள்ளார். 

இதில், பலத்த காயமடைந்த மகன் பொன்னுமணி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போன்னுமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகனை அடித்து கொலை செய்த தந்தை போன்னுசாமியை கைது செய்து கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close