[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

ஓயாத கனமழை : கேரளாவில் 11 பேர் பலி

heavy-rain-in-kerala-11-people-die

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். 

கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தப் பருவமழை 12ம் தேதி வரை தொடரும் என
கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக அங்கு கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில்
மழை நீர் புகுந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள்
சாய்ந்துள்ளன. 

மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள்
வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கனமழைக்கு இதுவரை 11 பேர்
பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் கனமழையால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close