[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான இடைக்காலத்தடை திரும்பப்பெறப்பட்டது
  • BREAKING-NEWS பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடும் வரை என்னுடைய மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் - பேரறிவாளன் தாய் அற்புதம்மாள்
  • BREAKING-NEWS தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன்; நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு - உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு
  • BREAKING-NEWS மத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும் - துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS குக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்
  • BREAKING-NEWS Videocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு
  • BREAKING-NEWS ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை

மரத்தால் செய்யப்பட்ட புதிய வகை சைக்கிள்  

a-new-wooden-bicycle-is-trendy-now

சைக்கிள் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட டிரெண்டி சைக்கிளை உருவாக்கி உள்ளனர் கோவை இளைஞர்கள்.

நகர் முழுவதும் மோட்டார் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கபட்டுள்ள நிலையில் , சைக்கிள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முற்றிலும் மரத்தாலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடனுன், இளைஞர்களை கவரும் வகையிலான ஒரு டிரெண்டி சைக்கிளை கோவையை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கி உள்ளனர். சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முற்றிலும் புதிய வடிவத்தில் தயாரித்து உள்ள இந்த சைக்கிள் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

கோவையை அடுத்த இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து வீட்டு உள் அலங்காரப் பணிகளைச் செய்து வருகிறார். தனது பழைய சைக்கிளை புதுப்பிக்க ஆசைப்பட்டபோது, தான் வீட்டு உள் அலங்கார வேலை செய்து வந்த மரத்தை கொண்டு சில பாகங்களை இணைத்து உள்ளார். அதன் மூலம் புதிய சைக்கிளை தயாரிக்க திட்டமிட்ட அவர், சுற்றுச்சூழல் மாசுபட்டால் பாதிக்கப்பட்டு வரும் இந்தச் சூழலில், இதுபோன்ற வித்யாசமான சைக்கிளை உருவாக்கினால் இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில், முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட சைக்கிளை உருவாக்கி உள்ளார் முருகேசன். தனது நண்பரின் உதவியுடன் உருவாக்கி உள்ள இந்த சைக்கிள்  ‘weather coating’ கொடுக்கப்பட்ட பிளைவுட்டை கொண்டுதான் உருவாக்கி உள்ளார். ஃப்ரேம், டிசைன், அலாய் என 90 சதவிகிதம் மரத்தாலேயே  சைக்கிளை மாற்றி உள்ளார். 

இவர் தன்னுடைய சைக்கிளுக்கு‘ஹைப்ரிட் பைக்’என பெயரிட்டுள்ளார். இது ஏழு கியர் கொண்டது, எஃகுவுக்குப் பதிலாக ஸ்டீலால் ஆனது. எடைக் குறைவு. இருக்கையின் உயரத்தை ஒரு ‘கிளிக்’கில் கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம். முன் சக்கரத்தையும் பின் சக்கரத்தையும் எளிதில் கழற்றி மாட்டலாம், இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளன என்கிறார் சைக்கிள் உருவாக்க உதவிய தமிழ்செல்வன். மேலும் தன்னுடைய மர சைக்கிள் எல்லாவற்றுக்கும் மேலாக சமதளமான தார் ரோட்டில் மட்டுமல்ல, மலையேற்றத்துக்கும் தாக்குப்பிடிக்கும் எனவும் கூறுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close