[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

நிரந்தரமாக மூடப்படுகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை..!

tuticorin-sterlite-plant-closed-permanently

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 22 ஆண்டுகளாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 23.3.2013 அன்று கண் எரிச்சல் உள்பட பல பிரச்னைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் ஆலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை செய்த மேல்முறையீட்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆலையை இயக்க 8.8.2013 அன்று அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதனை புதுப்பிக்க  ஆலை விண்ணப்பித்தது. ஆனால் ஏற்கனவே விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி மறுத்தது. எனவே 24.05.2018 முதல் ஆலைக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்ணீரும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் என்னையும், அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்து ஆலையை நிரந்தமாக மூட கோரிக்கை வைத்தனர். அதனை தமிழக அரசு கவனமாக பரிசீலனை செய்தது.

பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கு மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுகிறது” இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close