திருச்சி விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த பயணியிடம் தங்கம் பறிமுதல்!

துபாய் பயணியிடமிருந்து 977 கிராம் தங்கம் பறிமுதல்
Gold seized
Gold seizedpt desk

சமீபத்தில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியிடம், சுங்க இலாக்க அதிகாரிகள் சோதனை செய்ததில், பயணி கடத்திகொண்டு வந்த 2 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்ட செய்தி அடங்குவதற்குள், அதே திருச்சி ஏர்போர்ட்டில் துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் 977 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Gold seized
சூர்யா பட பாணியில் உடலில் தங்க கட்டிகள் கடத்தல்.. 3 கிலோ பறிமுதல்.. திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் திருச்சி வந்த பயணி ஒருவரிடமிருந்து சுமார் 70.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அதாவது 977 கிராம் 24 காரட் தங்கத்தை சுங்க இலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .

முன்னதாக, அப்பயணி 1081 கிராம் கொண்ட தங்கபேஸ்ட்டை மூன்று கேப்சூலில் வைத்து அதை தனது மலக்குடலில் மறைத்து வைத்து எடுத்து வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் அவரை சோதனைசெய்யும்போது, அவர் கடத்தி வந்த தங்கத்தை கைப்பற்றி, அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com