மிக்ஜாம் புயல் நிவாரண நிதி.. அதிமுக, பாஜக சொல்வதென்ன?

“குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெள்ள நிவாரண நிதியை மட்டுமே கணக்கில் கொண்டு பேசாதீர்கள். அம்மாநிலங்களில் அதிகமாக கொடுத்தார்கள் என்ற எந்த புள்ளிவிபரமும் இல்லை. போகிற போக்கில்தான் இவர்கள் சொல்கிறார்கள்” கரு நாகராஜன்
ஜெயக்குமார், கரு நாகராஜன்
ஜெயக்குமார், கரு நாகராஜன்pt web

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த வருடம் இறுதியில் வரலாறு காணாத மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் சொல்லிலடங்கா துயரத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு 38,000 கோடி நிதி ஒதுக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது.

மிக்ஜாம் புயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி
மிக்ஜாம் புயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி

இந்நிலையில, மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 285 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 115 கோடியே 49 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதேபோல, வெள்ள பாதிப்பிற்காக 397 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 160 கோடியே 61 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமார், கரு நாகராஜன்
“அநீதி, துரோகம், ஓரவஞ்சனை” - மிக்ஜாம் புயலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி.. சாடும் அதிமுக, திமுக

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பிற்காக தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு 276 கோடியே 10 லட்சம் ரூபாயை விடுவித்துள்ளது.

சமீபத்தில் மக்களவை தேர்தல் முடிந்த தமிழ்நாட்டிற்கு இந்த நிலை என்றால், இன்னொரு பக்கம் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி நிவாரணமாக 3,454 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிப்பு - தொடரும் விமர்சனங்கள்
தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிப்பு - தொடரும் விமர்சனங்கள்புதிய தலைமுறை

வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி அண்மையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டம் நடத்திய நிலையில் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்தக்கது.

ஜெயக்குமார், கரு நாகராஜன்
ராஜஸ்தான் | “I-N-D-I-A கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும்” - பாஜக அமைச்சரின் பேச்சு வைரல்

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள நீதிக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிட்டத்தட்ட 2015 ஆம் ஆண்டில் இருந்து நாம் கணக்கெடுத்து பார்த்தோமானால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை நாம் கேட்டுள்ளோம். ஆனால், யானைப் பசிக்கு சோளப்பொரி என்பதுபோல், இதுவரை 7 ஆயிரம் கோடி ரூபாய்தான் மத்திய அரசு கொடுத்துள்ளது.

வடமாநிலத்தில் ஏதேனும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உடனே வாரி வழங்குகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் மாநில அரசு அவர்களுக்கு வரி கொடுப்பதில்லையா.? வடக்குக்கு ஒரு நீதி தெற்குக்கு ஒரு நீதி என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன், “இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் சந்தர்ப்பவாத அரசியல். குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெள்ள நிவாரண நிதியை மட்டுமே கணக்கில் கொண்டு பேசாதீர்கள்.

அம்மாநிலங்களில் அதிகமாக கொடுத்தார்கள் என்ற எந்த புள்ளிவிபரமும் இல்லை. போகிற போக்கில்தான் இவர்கள் சொல்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட அவரது ஆட்சிக்காலத்தில் பேசவில்லை. இப்போதுதான் பேசுகிறார்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com