புதுச்சேரி | தலையில் நெல் மூட்டையுடன் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்! #ViralVideo

காரைக்கால் பகுதியின் அம்பகரத்தூரில் நெல் விற்பனையில் கலக்கி வருகிறார் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்.
மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்
மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்புதிய தலைமுறை

செய்தியாளர் - அப்துல் அலீம்

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னாள் வேளாண் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன், தற்போது நெல் மூட்டை தூக்கும் வீடியோவொன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவரேவும் தன் முகநூல் பக்கத்தில் அதை பகிர்ந்திருப்பதாக தெரிகிறது.

இவர் ஏற்கெனவே புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் சொந்தமாக விளை நிலங்கள் வைத்துள்ளார். அங்கு தீவிரமாக விவசாயமும் செய்து வருகிறார்.

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்
புதுச்சேரி: ஏலச் சீட்டு நடத்தி ரூ.1.31 கோடி மோசடி - ஆடம்பரமாக வாழ்ந்த தம்பதியர் கைது

இந்த நிலையில் தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை அம்பகரத்தூர் பகுதியில் உள்ள தனியார் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக இவர் சமீபத்தில் கொண்டு சென்றுள்ளார்

நெல் கொள்முதல் நிலையத்தில் கமலக்கண்ணன்
நெல் கொள்முதல் நிலையத்தில் கமலக்கண்ணன்

அப்பொழுது நெல் மூட்டை இறக்குவதற்கு பணியாளர்கள் குறைவாக இருந்ததால் கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகளை தானே முன்வந்து டிராக்டரில் இருந்து இறக்கி நெல் கொள்முதல் நிலையத்தில் இறக்கியுள்ளார். இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுகக்வே, அதை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்
‘இதுக்கு இல்லையா சார் ஒரு End-u..😥’ - தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com