[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: போலீஸ் மீது கல்வீச்சு தடியடி

people-protest-against-sterlite-plant-in-tuticorin

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் 100-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் தூத்துக்குடியில் இன்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ச்சியாக போராடி வந்தனர். ஆலையிலிருந்து வெளிப்படும் மாசுக்காற்றால் தங்களுக்கு பலவிதமான நோய்கள் வருவதாகவும், அதனால் எதிர்கால சந்ததியினர் வாழ முடியாத சூழ்நிலையில் தூத்துக்குடி சிக்கித் தவிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ச்சியாக கூறிவந்தனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு வைகோ, சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு அளித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் 100-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் தூத்துக்குடியில் இன்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதேபோல தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் போலீஸ் வேனை கவிழ்த்ததோடு, போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகளில் சேதம் ஏற்பட்டது. அதேபோல போராட்டக்காரர்கள் மீது போலீசாரும் தடியடி நடத்தினர். தொடர்ச்சியாக பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close