[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

காவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கு : 4 பேர் கைது!

nellai-police-jagadeesan-murder-case-4-person-arrested

நெல்லையில் மணல் கொள்ளையை தடுக்கச்சென்ற காவலர் ஜெகதீசன் துரை கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவர் ஜெகதீசன் துரை. இவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் மூலக்கரை பகுதியில் வசித்து வந்தார். மணற்கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வந்த இவர், யாருடனும் சமரசம் செய்து கொள்ளாமல் பணிபுரிந்துள்ளார். 

கடந்த 6ஆம் தேதி நம்பியாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கச் 5 பேர் கொண்ட குழுவுடன் தாமும் இணைந்து ஜெகதீசனும் சென்றார். அங்கு சென்றதும் அனைவரும் தனித்தனியாக பிரிந்து சென்று மணல் கொள்ளையர்களை தேடியுள்ளனர். அப்போது மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை மடக்கிய ஜெகதீசனை, இரும்புக்கம்பி மற்றும் பயங்கர ஆயுதங்களால் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜெகதீசன் பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர் அதிகாலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை விஜயநாராயணம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் குற்றத்தில் ஈடுபட்டதாக தாமரை குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (50,) முருக பெருமாள் (20),  கல்மாணிக்க புரத்தைச் சேர்ந்த மணிகுமார் (24) மற்றும் ராஜா ரவி (25) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்யுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close