[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

‘எந்தவித மனஉளைச்சலுக்கும் ஆளாகவில்லை’... நீட் மாணவிகளிடம் எழுதி வாங்கிய சிபிஎஸ்இ.!

neet-students-suffered-in-madurai

மதுரையில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தமிழ் மாணவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள் குளறுபடியால் 96 மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தாமதமாக தொடங்கி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 712 மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. காலை 9.50 மணிக்கு தேர்வு தொடங்கியதுபோது, 96 மாணவர்களுக்கு இந்தி மொழியில் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தி மொழியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைத்தனர்.

இதுதொடர்பாக தேர்வு அறை கண்காணிப்பாளர், தேர்வு பார்வையாளர் ஆகியோரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மதிய உணவு இடைவேளைக்குப்பின் த‌மிழ் வினாத்தாள் வரவழைக்கப்பட்டு‌‌‌, 96 மாணவர்களுக்கு மட்டும் தாமதமாகத் தேர்வு தொடங்கி நடைபெற்றது. தாமதமாக தொடங்கிய நீட் தேர்வை எழுதி முடித்த மாணவி ஒருவர் தேர்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ நாங்கள் தமிழ் மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தோம். ஆனால் எங்களுக்கு ஹிந்தியில் வினாத்தாள் கொடுத்தார்கள். இதனால் அங்குள்ளவர்களிடம் முறையிட்டோம். பின்னர் அந்த அறையில் எங்களை காக்க வைத்தார்கள். தின்பண்டங்கள் மற்றும் மதிய உணவு கொடுத்தார்கள். பின்னர் தாமதாக தமிழ் மொழியில் வினாத்தாள் கொடுத்தார்கள். அதனை நாங்கள் எழுதினோம். தேர்வு முடிந்தபின், எந்தவிதமான மனஉளைச்சலுக்கும் ஆளாகவில்லை என எழுதி வாங்கினார்கள். அதுவும் ஆங்கிலத்திலேயே இருந்தது. ஆங்கிலம் ஓரளவிற்கு தெரியாதவர்கள், எதற்காக கையெழுத்து போடுகிறாம் என தெரியாமலேயே கையெழுத்து போட்டார்கள். ஏன் அவர்கள் எங்களிடம் எழுதி வாங்கினார்கள் என தெரியவில்லை” என மாணவி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை கூறும்போது, “ தேர்வுக்கு பின் சிபிஎஸ்இ சார்பில் தான் எழுதி வாங்கப்பட்டது” என கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close