[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

தீபாவளி, பொங்கல் பண்டிகையில் வேலை பார்த்தோமா ? மறுக்கும் மக்கள்..!

this-tn-village-has-no-leave-for-mnrega

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பொங்கல், உழைப்பாளர் தினம் உள்ளிட்ட விடுமுறை தினங்களில் கூட கிராமவாசிகள் வேலைபார்த்ததாக ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய தினங்களில் தாங்கள் வேலை பார்க்கவில்லை என கிராமவாசிகள் கூறுகின்றனர்.

கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் முயற்சியாக மத்திய அரசின் சார்பில் கொண்டுவரப்பட்டது தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். திட்டத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு ஒரு நபருக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்திலும் பல மாவட்டங்களில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பொங்கல், உழைப்பாளர் தினம் உள்ளிட்ட விடுமுறை தினங்களில் கூட கிராமவாசிகள் வேலைபார்த்ததாக ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை இருக்காது. ஆனால் கோவை மாவட்டம் சூளுர் அருகே உள்ள மாதாபூர் கிராமத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூட  கிராமவாசிகள் வேலை பார்த்ததாக பதிவாகியுள்ளது. அதற்காக அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் பதிவாகியுள்ள தகவல்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் விடுமுறை நாட்களில் மொத்தமாக 4336 பேர் வேலை செய்திருப்பதாகவும் அதற்கான சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து கிராமத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, தீபாவளி, பண்டிகை என்றாலே வீட்டில் ஆயிரம் வேலை இருக்கும். எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள். நாங்கள் எப்படி வேலைக்கு செல்வோம். அன்றைய தினம் எங்களுக்கு எந்த சம்பளமும் இல்லை என கூறியுள்ளனர். இதன் மூலம் பஞ்சாயத்து அதிகாரிகள் போலியாக கணக்கை காட்டி மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை சுரண்டியிருப்பது அம்பலமாகியுள்ளது. பணத்தை சுரண்டியது மட்டுமல்ல. ஒருவேளை தொழிலாளர்கள் சட்டத்தை மீறி கிராமவாசிகளை பண்டிகை நாட்களில் வேலை செய்ய நிர்பந்தித்தால் அதுகூட சட்டத்தை மீறிய செயலே ஆகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close