[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு

female-denial-because-there-is-no-way-home

தன் வீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் யாரும் பெண் தர மறுப்பதாகவும் தன் வீட்டிற்கு வழித்தடம் ஏற்படுத்தி தரக் கோரி திருமண கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு. 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி சேனாபதி செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவர் குடியிருந்து வரும்   வீட்டிற்கு அரசால் வழங்கப்பட்ட பட்டா உள்ள நிலையில் அவரது வீட்டிற்கு வழித்தடமானது குறிப்பிடப்படவில்லை. இதனால் இவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் அவர்கள் வீட்டிற்கு வழி இல்லாதவருக்கு எப்படி பெண் தருவது என பெண் தர மறுப்பதாகவும், இதனால் தங்கள் வீட்டிற்குச் சென்று வர முறையான பாதை அமைத்து தரும்படி அருணாசலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள அவரது இடத்திற்கு முறையான பாதையை ஓதுக்கீடு செய்து தர இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்னிலையில் இதுவரையிலும் அதிகாரிகள் தங்களுக்கு வழித்தடம் ஏற்படுத்தி தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தனக்கு திருமணம் நடக்க வழித்தடம் பிரச்சனையாக இருப்பதை உணர்த்தும் விதமாகவும் பாதிக்கப்பட்ட அருணாசலம் மணமகன் கோலத்தில் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கழுத்தில் மாலையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். இதனை கண்ட காவல்துறையினர் மணமகன் கோலத்தில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க மறுப்பு தெரிவித்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு மாலையை கழட்டிய பிறகே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். திருமணம் நடக்க அரசு அலுவலர்களே தடையாக இருப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் மணமகன் கோலத்தில் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close