[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

வழக்கறிஞர் எனக்கூறி 35 லட்சம் மோசடி

fraud-lawyer-35-lakhs-scams-in-namakkal

நாமக்கல் அருகே மோசடி வழக்கு தொடர்பாக போலி வழக்கறிஞர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது ஏராளமான சிலைகள் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், வழக்கு ஒன்றிற்காக வழக்கறிஞர் எனக் கூறிவந்த வின்ஸ்டன் சர்ச்சில் என்பவரை அணுகியுள்ளார். வழக்கை நடத்த ரமேஷிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் வரை அவர் பெற்றுள்ளார். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சந்தேகம் அடைந்த ரமேஷ் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டபோது அவர் வழக்கறிஞரே இல்லை என தெரியவந்தது. எனவே, பணத்தை பெற்றுத்தரக்கோரி காவல்நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். வழக்கறிஞரை தேடி அவரது வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் ஒரு அறையில் கற்சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் சிலைகள் இருந்தது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close