[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

மிரளவைக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்: டாப் 10

protest-against-sterlite-top-10

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரியும், அதன் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தூத்துக்குடியில் மிரள வைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

* ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட்டால் தூத்துக்குடி மக்கள் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

* கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் அதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் பூங்கா முன்பாகக் கூடி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* பிப்.,13 ஆம் தேதி பிற்பகல், கிராமத்தினர் உட்பட 231 பேரை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர்.

* கடந்த 40 தினங்களாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர்.

* போராட்டத்தின் அடுத்தகட்டமாக தூத்துக்குடி முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

* சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே திரண்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 20,000-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் பங்கேற்பு

* ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான தண்ணீர், தாமிரபரணி ஆற்றிலிருந்து எடுக்கப்படுவதாக மக்கள் புகார்.

* நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் பொய்த்து மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் தூத்துக்குடி மக்கள் வேதனை

* ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தூத்துக்குடி மக்கள் எச்சரிக்கை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close