ரூ.20 வரை உயர்வு| போட்டி போட்டு ஏறுமுகத்தில் மளிகைப் பொருட்களின் விலை.. விழிபிதுங்கும் சாமானியர்கள்!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும் தற்போது தேர்தலுக்கு பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலை போட்டி போட்டு ஏறுமுகத்தில் உள்ளது.
மளிகைப் பொருட்கள்
மளிகைப் பொருட்கள்pt web

உற்பத்தி குறைவுக்கு காரணம் என்ன?

தமிழ்நாட்டில் மளிகைப்பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாகவே படிப்படியாக உயர்ந்து வரும் சூழலில் சென்னையில் மொத்த விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது பல மளிகைப் பொருட்களின் விலை 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் இன்னும் சில நாட்களில் சில்லறை விற்பனையில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உணவு கலாசாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் அரிசி, டெல்டாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு காரணமாக உற்பத்தி குறைந்து கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்துவிட்டதாகவும், இதன்காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து அரிசி கொண்டுவரப்படுவதால், அரிசி ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. உயர் ரக அரிசி 350 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மளிகைப் பொருட்கள்
நாமக்கல்: விவசாயிகளுக்கு வந்த நோட்டீஸ்..வெளிச்சத்துக்கு வந்தது கூட்டுறவு சங்கத்தின் 1.17 கோடி மோசடி!

வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்

துவரம் பருப்பு ஒரு கிலோவிற்கு 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து எடுத்துவரப்படும் செலவு, வெளிமாநில வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால், இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் பருப்பு விலை மேலும் உயருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

கோயம்பேடு மொத்த வியாபாரி முத்துப்பாண்டி கூறுகையில், “விளைச்சல் குறைவு என்பதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்தான் வருகிறது. அவை பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்துதான் வருகிறது. எனவே பணம் கொடுத்தால்தான் பொருள் வரும். அதுமட்டுமின்றி போக்குவரத்து செலவுகளும் இதில் சேரும். இதன் காரணமாக விலைவாசியும் அதிகளவில் உள்ளது” என்றார்.

மளிகைப் பொருட்கள்
மணிப்பூர் வன்முறை- CRPF வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

எந்த பொருள் எவ்வளவு உயர்ந்துள்ளது 

கடந்த 2 மாதங்களில் ஏராளமான அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ சர்க்கரையின் விலை 40 ரூபாயில் இருந்து 48 ரூபாயாக அதிகரித்துள்ளது. 295 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சீரகத்தின் விலை தற்போது 380 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதேபோல், 590 ரூபாய்க்கு விற்பனையான மிளகு 640 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மிளாகாய்த்தூள் 310 ரூபாய்க்கும், மஞ்சள்தூள் 222 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. துவரம் பருப்பு விலை 155-ல் இருந்து 170 ரூபாயாகவும், உளுந்தம் பருப்பு 130-ல் இருந்து 145 ரூபாய்க்கும் மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சோம்பு 170 ரூபாய், பொட்டுக் கடலை 100 ரூபாய், கருப்பு கொண்டைக்கடலை 100 ரூபாய், வெள்ளை கொண்டைக்கடலை 145 ரூபாய், கடுகு 95 ரூபாய், வெந்தயம் 90 ரூபாய் என மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மளிகைப்பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், வழக்கமாக உலகச் சந்தை தாக்கத்தால் அடிக்கடி விலையேறும் சமையல் எண்ணெய் விலையில் தற்போது எந்த மாற்றமின்றி விற்பனையாவது சற்று ஆறுதலான விசயமாக உள்ளது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com