அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவாரா? ரேபரேலியில் யார்? - காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் குழப்பம்!

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், கட்சியின் தேசிய தலைவர் கார்கே முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
ராகுல் காந்திட்விட்டர்

செய்தியாளர்: கணபதி சுப்ரமணியம்

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா? உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தொகுதிகளில் களம் இறங்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் தேசிய தலைவர் கார்கே இந்த இரண்டு தொகுதிகள் தொடர்பான முடிவை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rahul Gandhi | Priyanka Gandhi
Rahul Gandhi | Priyanka GandhiPTI
ராகுல் காந்தி
ஹெலிகாப்டரில் ஏறும்போது தடுமாறி விழுந்த மம்தா பானர்ஜி- வீடியோ

ஓரிரு நாட்களில் கார்கே முடிவெடுப்பார் என ராகுல் காந்திக்கு நெருக்கமான கேசி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், வயநாடு தொகுதி வாக்குப்பதிவுக்கு பிறகு இந்த முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சென்ற முறை ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்ததால், ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதேபோல் ரேபரேலி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என சோனியா காந்தி முடிவு செய்துள்ளதால், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து, ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆகவே இதுவரை தேர்தலில் களம் காணாத பிரியங்கா காந்தி இந்த முறை ரேபரேலி தொகுதியில் இருந்து போட்டியிடுவாரா என்பது காங்கிரஸ் கட்சியில் முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது.

Mallikarjun Kharge
Mallikarjun KhargeTwitter
ராகுல் காந்தி
கேரளா | மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் விடுத்த பகுதி - இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச வாக்குப்பதிவு!

விரைவிலேயே இந்த இரண்டு முக்கிய தொகுதிகள் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நாட்டிலேயே மிக அதிகமாக 80 உறுப்பினர்களை உத்தரப்பிரதேச மாநிலம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கிறது என்பதால், அந்த மாநிலத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் போட்டியிட வேண்டும் என்பது மாநில காங்கிரஸ் தலைவர்களின் விருப்பம். ஆகவேதான் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்ணோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com