Hospitalpt desk
தமிழ்நாடு
விருதுநகர்: பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற இளைஞர் - விபரீதத்தில் முடிந்த சமூக வலைதள பழக்கம்!
திருமணத்திற்கு மறுத்த பெண்ணை, வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற இளைஞர் தப்பியோட்டம். தீக்காயங்களுடன் இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: கருப்பஞானியார்
ராஜபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளார் மதுரையைச் சேர்ந்த குணசேகரன் என்ற இளைஞர். அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். ஆனால், திருமணத்திற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
fire file image
இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் இன்று அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த மண்ணெண்ணெய்யை அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியுள்ளார். இதில், அப்பெண்ணிற்கும், அவரது மூத்த சகோதரிக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு தப்பியோடிய இளைஞரை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.