30 வினாடிகளில் புதிய கின்னஸ் சாதனை - பாகிஸ்தான் நபரின் சாதனையை முறியடித்த மதுரை இளைஞர்!

30 வினாடிகளில் 29 நெருப்பு கான்கீரிட் கற்களை கைகளால் உடைத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர் செய்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்து மதுரை இளைஞர் புதிய சாதனை படைத்துள்ளார்.
Guinness Record
Guinness Recordpt desk

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மென்பொருள் பொறியாளர் விஜய் நாராயணன். இவர், டேக்வாண்டாவில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இதுவரை 32 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவர், தனது 33வது கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Guinness Record
Guinness Recordpt desk

30 வினாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்களை கைகளால் உடைத்து, இதற்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் என்பவர் 30 வினாடிகளில் 25 கான்கிரீட் கற்களை உடைத்த உலக சாதனையை முறியடித்துள்ளார். இந்த உலக சாதனையை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பயிற்சியாளர் நாராயணனை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com