செயலிழந்த சிசிடிவி கேமராக்கள் pt desk
தமிழ்நாடு
நீலகிரி: வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் நடந்தது என்ன?
நீலகிரி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: N.ஜான்சன்
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப் பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Nilgiri Counting centerpt desk
அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவாரா? ரேபரேலியில் யார்? - காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் குழப்பம்!
இந்நிலையில், அரசியல் கட்சியினரும் மற்றொரு அறையில் இருந்தபடி வாக்குப் பதிவு இயந்திரங்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென சிசிடிவி காட்சிகள் பெரிய திரைகளில் தெரியாமல் அனைத்து கேமராக்களும் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.