[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்

திராவிடத்தைத் தவிர்த்த டிடிவி தினகரன்!

dravida-has-beed-dropped-from-ttv-party

எதிர்பாத்தபடியே, அமைப்பின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தி விட்டார் டிடிவி தினகரன். கூடவே சர்ச்சைகளும் விவாதங்களும் கிளம்பி இருக்கிறது.

ஆர். கே. நகரில் வென்று எம்எல்ஏவான டிடிவி தினகரன், தனிக் கட்சி திட்டத்தை முதலில் யோசித்தார். இதை அவருடன் இருப்பவர்களே ஏற்கவில்லை. அதிமுகவை கைப்பற்றுவதே நோக்கம் என்று கூறினர். இதையடுத்து தனது முடிவை மாற்றினார் டிடிவி. புதிய கட்சியல்ல, புதிய அமைப்பு என்று அதிரடி கொடுத்தார்.

அவர் சொன்ன படி, மதுரை மேலூரில், ஏகப்பட்ட ஆதரவாளர்களுக்கு இடையே, ’அம்மா மக்கள் முன்னேற்றக் கழக’த்தையும் (அமமுக) கருப்பு வெள்ளை, சிவப்பு நிறங்களின் நடுவே ஜெயலலிதா உருவம் கொண்ட கொடியையும் இன்று அறிமுகப்படுத்தப்படுத்தி விட்டார். கூடவே இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று கூறியிருக்கிறார்.

‘அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் இருக்கும் டிடிவி தினகரன், அந்தக் கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆரையும் கட்சியின் வேரான திராவிடத்தையும் மறந்தது ஏன்?’ என்று கொதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் எம்.ஜி.ஆர் பக்தர்கள். அதே நேரத்தில், எம்.ஜி.ஆரை வைத்து இனி அரசியல் செய்வது கஷ்டம் என்பதால் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி டிடிவி களத்தில் இறங்கிவிட்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close