[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

திறக்கும் முன்பே இடிந்துவிழும் நிலையில் பள்ளிக் கட்டிடம்

madurai-high-court-ordered-to-inspect-school-building

ராமநாதபுரம் மாவட்டம் திணைக்குளத்தில் 18 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகள் குறித்து ஐஐடி பேராசிரியர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஊராட்சிக்குட்பட்ட திணைக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 700 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 18 மாதங்களுக்கு முன்பு இந்தப் பள்ளிக்காக புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. ஆனால் இந்தப் புதிய வகுப்பறை கட்டிடங்கள் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு முன்னதாகவே இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மாணவர்கள் வகுப்பறைகளில் சென்று படிக்க முடியாமல் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

புதிதாக கட்டபட்ட கட்டிடத்தில் மழை நீர் கசிகிறது. இது தரமற்ற முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதை தெளிவுபடுத்துகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஒப்பந்தாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நாளிதழில் ஒன்றில் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தாமாக முன் வந்து வழக்கை எடுத்து விசாரித்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு , பள்ளியில் புதிதாக கட்டபட்ட வகுப்பறையின் கட்டிடங்களை ஐஐடி பேராசிரியரை  கொண்டு ஆய்வு செய்து கட்டுமான பணியின் தரத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து தமிழகப் பொதுப்பணித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close