[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

பொதுமருத்துவத்தில் தமிழகம் முன்னோடி: ஆளுநர் புகழாரம்

tamilnadu-pioneers-in-general-medicine-governor-praises

மருத்துவத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையச் சட்ட முன்வடிவில் தகுந்த மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவதாக, ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.சட்டமன்றத்தில் பேசிய அவர், பொதுமக்களுக்கு தேவையான தரமான மருத்துவ வசதிகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு  பாராட்டு தெரிவித்தார். பொதுமருத்துவத் துறையை மேம்படுத்துவதற்காக மாநில அரசு எடுத்த முன்னோடி முயற்சிகளால் ஐநா அமைப்பால் வரையறுக்கப்பட்ட மருத்துவத்துறை இலக்குகளை முன்கூட்டியே தமிழகம் எட்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், இறந்தோர் உடல் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்துவதில், நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதுடன், அதற்கான தேசிய விருதை 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பெற்றுவருவதற்கும் ஆளுநர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் நலனையும், மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நலனையும் காக்கும் வகையில் தமிழக அரசு முன்வைத்துள்ள கருத்துகளின் அடிப்படையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்ட முன்வடிவில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close