[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

பொங்கல் பரிசு விநியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

chief-minister-palanisamy-started-pongal-gift-delivery

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய தொகுப்பை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி 210 கோடி ரூபாய் செலவில், தமிழகம் முழுவதும் உள்ள் ஒரு கோடியே 84 லட்சம் பேர் பயனடையும் வகையில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை சென்னையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்திருப்பதையொட்டி, அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நாளை இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்கின்றனர். அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைகள், இலங்கை முகாம்களில் உள்ளோருக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close