[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

தினக்கூலி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை: அரசு சார்பில் விளம்பரம் 

daily-wage-drivers-and-conductors-advertising-on-behalf-of-the-government

தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

போக்‌குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மலைக்கோட்டை, கண்டோன்மெண்ட், தீரன் நகர், புறநகர் கிளைகளை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி நகர் மற்றும் புறநகர்களில் வெறும் 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. திருச்சியிலிருந்து தொலைதூரத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஒன்று கூட இயக்கப்படவில்லை.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close