[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நரிக்குறவர் இன மக்களுக்கு பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவு

high-court-order-to-vellore-collector-that-give-patta-land-for-narikkuravar-people

வேலூர் மாவட்டம் கீழ்வடுங்கன்குட்டை பகுதியில் சாலையோரம் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் கீழ்வடுங்கன்குட்டை‌ பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சாலை ஓரங்களில் 35க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இந்நிலையில், அந்த இடத்தின் உரிமையாளர், நரிக்குறவர்களை அங்கிருந்து காலி செய்ய வலியுறுத்தியதன் அடிப்படையில், ஒரேநாளில் காவல்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து இவர்களின் குடிசைகளை அகற்றியுள்ளனர். இந்நிலையில், ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், கீழ்வடுவங்கன்குட்டையில் உள்ள நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தர‌விட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close