[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
  • BREAKING-NEWS கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இலங்கை அணி எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் சர்வ சாதாரணமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து ஆர்.கே. நகரில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆய்வு
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்ததாக ஸ்டாலின் புகார்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல்
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு
  • BREAKING-NEWS கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன் - மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
தமிழ்நாடு 02 Dec, 2017 04:37 PM

737 மீனவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

737-fishermen-safe-minister-jayakumar

கடலில் காணாமல் போன 737 மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம்போல் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அந்த நேரத்தில் ஒகி புயல் வீசியதால் அவர்கள் கடலில் சிக்கிக் கொண்டனர். புயல் குறித்த முன்னறிவிப்பு ஏதும் இல்லாத காரணத்தினால், கடலில் மாட்டிக்கொண்ட அவர்களை விரைந்து மீட்டெடுக்க  வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 2000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் இருந்து இன்னும் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனிடைய, மீனவர்களை மீட்பதற்காக அதிகப்படியான ஹெலிகாப்டர்களை விரைந்து அனுப்ப வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடலில் காணாமல் போன 737 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பி கொண்டு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் லட்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கி இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close