[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

சென்னையில் மழைக்கு 7 பேர் பலி!

seven-rain-related-deaths-in-chennai

சென்னையில் பெய்த கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவரது நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடானது. தி.நகர், எழும்பூர், மெரினா, அடையாறு, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் முட்டிக்கால் அளவுக்கு தேங்கியது. சென்னை தி.நகரில் டீக்கடையில் வேலை பார்த்த பிரசாந்த் இடி தாக்கி உயிரிழந்தார். சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே தேங்கி கிடந்த நீரில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். 

சென்னை எண்ணூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரதியா என்ற 60 வயது மூதாட்டி உயிரிழந்தார். சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில்வே மேம்பாலத்தில் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கமலேஷ் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து நீரில் அடித்துச்செல்லப்பட்டார். 
பெரியமேட்டில் 20 வயது மதிக்கத்தக்க முகேஷ் என்பவர் சாலையோரம் இறந்து கிடந்தார். குரோம்பேட்டையில் மூன்று நாட்களுக்கு முன் பெய்த மழையில் உயர்மின் அழுத்த மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நங்கநல்லூரில் கஜேந்திரகுமார் என்ற நபர் மழையின் போது கட்டுமானப் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதே போன்று பல்லாவரத்தில் குட்டையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். அவர் யார் என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ChennaiRainDeathsமழைபலிசென்னை
Advertisement:
Advertisement:
[X] Close