[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

தரைப்பாலம் அடித்துச் சென்றதால் போக்குவரத்து பாதிப்பு

flood-in-vellore-peoples-are-suffer

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வெலதிகாமணி பெண்டா பகுதியில் இருந்த தரைபாலம் காட்டாறு வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டது. இது தெரியாத நிலையில், அவ்வழியாக வந்த மினி சரக்கு வேன் மற்றும் 3 இருசக்கர வாகனங்களும் 7 அடி பள்ளத்தில் விழுந்தன. அதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வெலதிகாமணி பெண்டா, வீரனமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் ஆந்திராவிலிருந்து வாணியம்பாடிக்கு வரும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close