[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்-நடிகர் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கமாட்டார்- தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
  • BREAKING-NEWS குஜராத்தில் 2008 ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி டெல்லியில் கைது
  • BREAKING-NEWS பத்மாவத் திரைப்படத்திற்கு தடை நீக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான், மத்தியப்பிரதேச அரசுகள் முறையீடு
  • BREAKING-NEWS இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும்- கமல்
  • BREAKING-NEWS சென்னை காமராஜர் சாலையில் இன்று, ஜன.24 மற்றும் குடியரசு தினத்தன்றும் போக்குவரத்து மாற்றம்- காவல்துறை
  • BREAKING-NEWS குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தற்போது ஒத்திகை நடக்கிறது
தமிழ்நாடு 10 Oct, 2017 07:51 PM

ரவுடி ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டு வர நீதிமன்றம் உத்தரவு

rowdy-sridhar-case-highcourt-order-to-central-govt

கம்போடியாவில் இருந்து  ரவுடி ஸ்ரீதர் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான ஆவணங்களை உடனே அளிக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஸ்ரீதர். காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இவர் இந்தியாவில் இருந்து தப்பித்து துபாய் சென்று பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்பட்டது.  இந்நிலையில் அவர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக கம்போடியா சென்ற அவரது மகள் தனலட்சுமி, உடலை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறி திரும்பினார். 

இதனையடுத்து ஸ்ரீதரின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீதரின்  உடலை கொண்டு வருவதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனவாசன், கம்போடியாவில் இருந்து ஸ்ரீதர் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவித்தார். மத்திய அரசு தரப்பு விளக்கத்தை கேட்ட நீதிபதி, ஸ்ரீதர் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான ஆவணங்களை உடனே அளிக்குமாறு உத்தரவிட்டடார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close