[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
  • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
  • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
  • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
  • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
தமிழ்நாடு 09 Oct, 2017 07:36 AM

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - இன்று விசாரணை

disqualifies-18-mlas-supporting-ttv-dhinakaran-case-hearing-in-hc

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு மீதான விசாரணை கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த உத்தரவை சபாநாயகர் கடிதம் மூலமாக தாமதமாகவே அனுப்பியதாகவும், முன்னதாக ஊடகங்கள் மூலமே தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், தகுதிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு 18 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், போதுமான அவகாசம் தரப்பட்டதாகவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை, 9ஆம் தேதி (இன்று) நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். அன்றைய தினம் யாரும் ஒத்திவைக்கக் கேட்கக் கூடாது என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் இவ்விரு வழக்குகள் மீதான விசாரணை நடைபெறவுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close