[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கெடிலம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்

cuddalore-river-water-issue

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டையில், கெடிலம் ஆற்றில் உள்ள தடுப்பணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

கெடிலம் ஆற்றின் குறுக்கே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நன்னீர் சேகரிப்புக்காக தடுப்பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணையின் அருகேயுள்ள தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீரால், தடுப்பணையில் இருந்த ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. 

ஆலையிலிருந்து கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் பல முறை கோரிக்கைவிடுத்தும் பயனில்லை. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், ஆலையிலிருந்து மொத்தமாக கழிவுநீரை வெளியேற்றுவதும், அதில் மீன்கள் இறந்து மிதப்பதும் தொடர்ந்து வருகிறது. ஆனால், நீரின் அடர்த்தி அதிகரிப்பால் மீன்கள் இறந்துவிடுவதாக மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் , நீர் அடர்த்தியாகக் காரணம் ஆலையிலிருந்து வரும் கழிவுநீரே எனக்கூறிய பொதுமக்கள், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் வலியுறுத்தினர். தகவலறிந்த கடலூர் வட்டாட்சியர் பாலமுருகன், மீன்கள் இறந்து கிடக்கும் இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

வீடியோ

Advertisement:
Related Tags : RiverCuddaloreTamilnaduFish
Advertisement:
Advertisement:
[X] Close