[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

கெயில் திட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

gail-issue-dmk-mkstalin-warns-state-government


கெயில் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முற்பட்டால் விவசாயிகளுடன் இணைந்து திமுக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமி்ழகத்தில் உள்ள விளைநிலங்களின் ஊடாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களை பதிக்க,  மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மீண்டும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். துப்பாக்கி குண்டுகளுக்கும் அஞ்சாமல் விளைநிலங்களைக் காப்போம் என்ற விவசாயிகளின் குரலை மத்திய அரசு உதாசீனப்படுத்தக்கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இத்திட்டத்தை அனுமதிக்கப் போவதில்லை என்று மறைந்த ஜெயலலிதா உறுதிமொழி அளித்ததையும், இதுபற்றி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதையும் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார். 
நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம், மேகதாதுவில் தடுப்பணை கட்டும் கர்நாடகாவின் திட்டம் போன்றவற்றில் தமிழகத்தின் உரிமைகளை கோட்டைவிட்ட அதிமுக அரசு, கெயில் விவகாரத்தில் தூங்கிவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் விவசாய நிலங்கள் மத்தியில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் மேற்கு மண்டல விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close