[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

மக்கள் பலனடைவதை தமிழக அரசு விரும்பவில்லை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

javadekar-accuses-tn-goverment-over-uday-project

மத்திய அரசின் உதய் திட்டத்தால் தமிழக மக்கள் பலன் பெறுவதை மாநில அரசு விரும்பவில்லை என மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளருமான ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில், பாரதிய ஜனதாவின் தேர்தல் மையக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவடேகர், மத்திய அரசின் உதய் திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தது என்று கூறினார்.

மின்துறையில் செலவுகளைக் குறைக்க உதய் திட்டம் உதவும் என்று கூறிய அவர், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட 18 மாநிலங்கள் உதய் திட்டத்தைப் பின்பற்றுவதாகக் கூறினார். ‌உதய் திட்டத்தை பின்பற்றும் மாநிலங்கள் நல்ல பலனைப் பெற்றுள்ள‌தாக கூறிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசின் முயற்சியின் காரணமாக எல்ஈடி விளக்குகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பல கோடி மக்கள் குறைந்த விலை எல்ஈடி விளக்குகளை பயன்படுத்தி பலனடைந்துள்ளதாக கூறிய ஜவடேகர், தமிழக அரசு, மத்திய அரசின் இந்த திட்டத்தைப் பற்றி எந்த ஆர்வமும் காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close