[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

கீழடி அகழ்வாராய்ச்சி: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு

keeladi-archaeology-research

கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் பண்டையக்கால நாகரீக நகரம் ஒன்று நிலத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து எடுக்கப்பட்ட
பொருட்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை என்றும், இவை பண்டையக்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்றும் தொல்லியல் துறை
ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கீழடியில் அகழாராய்வு பணிகளை தொடர வேண்டும், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை வைக்க அருங்காட்சியகம் அமைக்க
உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் சுந்தரேஷ்,
சதீஸ்குமார் ஆகியோர் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அரசு வழக்கறிஞர்களும் உடனிருந்தனர். அகழாராய்வில் கண்டெடுக்கப்பட்ட
பொருட்களை பார்வையிட்ட நீதிபதிகள் அவற்றின் பாதுகாப்பு குறித்து தொல்லியல் கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்தனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close