[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் வரும் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்- தமிழக அரசு
  • BREAKING-NEWS தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திரா: நெல்லூரில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 27 பேர் கைது
  • BREAKING-NEWS அரசியல் ஒரு சாக்கடை; யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்- மு.க. அழகிரி
  • BREAKING-NEWS மேல்மலையனூர் அங்காளம்மன்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS ஆந்திரா: கடப்பாவில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 5 தமிழர்கள் குறித்து விவரம் அறிய 9121100565,9121100581,9121100582 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்

மருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனை: காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

doctors-without-drugs-child-death-by-fever

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே முல்லை நகரில் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்தார். அருகிலுள்ள, அரசு பொது மருத்துவமனையில் சரியான மருத்துவர்கள் இல்லாததே இந்த குழந்தையின் உயிரிழப்பிற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போச்சம்பள்ளி அருகே முல்லைநகர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன், மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது இளைய மகள் ரக்ஷ்னாவுக்கு (வயது 4) கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென காய்ச்சல் அதிகரித்ததால்,போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரக்ஷ்னாவை அனுமதித்து சோதித்த போது, அங்கு முடியாதென தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து இரவு தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். காய்ச்சல் வந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள தருமபுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள்ளாக குழந்தை இறந்தது கிராமத்து மக்களிடையே பீதியையும், கவலையையும் அளித்துள்ளது. அருகிலுள்ள, போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சரியான மருத்துவர்கள் இல்லாததே இந்த குழந்தையின் உயிரிழப்பிற்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close