[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
 • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
 • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
 • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
 • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
 • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
 • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
 • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
 • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
தமிழ்நாடு 14 Sep, 2017 06:06 PM

அரியலூர் ரங்கீலாவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஒன்றரை லட்சம் நிதி 

ariyalur-rangaila-vijay-fans-give-one-lakhs

விஜய் மக்கள் இயக்கத்தால் அரியலூர் மாணவி ரங்கீலாவின் படிப்பாக ஒன்றரை லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.

அரியலூரைச் சேர்ந்த ரங்கீலா என்ற மாணவி கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்குக் கன்னியாகுமரி விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாக இருந்த ஜோஸ்பிரபு படிப்புக்கான கல்விக்கட்டணத்தை செலுத்துவதாக உறுதியளித்திருந்தார். 

ஆனால் அவர் உறுதியளித்தபடி நிதியுதவி அளிக்கவில்லை. ஆகவே  படிப்பை தொடர முடியாமல் வீடு திரும்பினார் ரங்கீலா. இது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மாணவி ரங்கீலா விஜய் பிறந்தநாளின் போது தன்னை சென்னைக்கு அழைத்து சென்று விஜயிடம் இருந்து சான்றிதழ் பெறுவதுபோல் எல்லாம் புகைப்படம் எடுத்ததாகவும் ஆனால் சொன்னது போல கல்விக்கான நிதியுதவி அளிக்கவில்லை என்றும் மனம் வருந்தி கூறியிருந்தார். மேலும் இதனால் தனது படிப்பு பாழாகிப் போய்விட்டதாக தெரிவித்திருந்தார் 

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கல்வி நிதியுதவி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. 
இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து அரியலூர் மாவட்ட விஜய் நற்பணி மன்றத் தலைவர் சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் ”அரியலூர் மாணவி ரங்கீலாவிற்கு நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்த ஜோஸ்பிரபு எங்களது ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்.  அவர் நீக்கப்பட்டது தெரியாமல் ரங்கீலா அவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். அவர் அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்துள்ளார். 

ரங்கீலாவிற்கு ஜோஸ்பிரபு அளித்த வாக்குறுதி குறித்து எனக்கோ உள்ளூர் நிர்வாகிகளுக்கோ தெரியாது.  உண்மை நிலை இவ்வாறு இருக்க காழ்ப்புணர்ச்சியோடு சிலர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றி விட்டதாகப் பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர். வேண்டும் என்றே  நாங்கள் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றியதாகத் திரித்து கூறி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ரங்கீலாவுக்கு நாங்கள் நிதியுதவி செய்யத் தயார். மாணவ சமுதாயத்தின் மீது விஜய்யும் அவரது ரசிகர்களும் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதை நாடு நன்கு அறியும். மாணவி ரங்கீலாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர் கல்வியைத் தொடர நிதி உதவி வழங்கத் தயாராக உள்ளோம்.  அவர் நாங்கள் வழங்க உள்ள நிதியை பெற்று மாணவி அவர் கல்வியைத் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தால் ரங்கீலாவின் படிப்பாக ஒன்றரை லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close