[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
  • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தமிழ்நாடு 11 Sep, 2017 08:23 AM

69% இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

sc-to-hear-plea-against-69-quota

தமிழக அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

நெல்லையைச் சேர்ந்த திருமா மகள் என்ற மாணவியின் சார்பாக அவரது தந்தை கோவிந்த ராஜ் இவ்வழக்கை தொடர்ந்துள்ளார். தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு சட்டத்தால் தனது மகளுக்கு மருத்துவப்படிப்பு வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதுடன் நீட் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும் அரசுக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இயலாத நிலை தனது மகளுக்கு ஏற்பட்டுள்ளதாக கோவிந்தராஜ் கூறியுள்ளார். 

50% இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட்டிருந்தால் தனது மகள் எடுத்த மதிப்பெண்ணுக்கு நிச்சயம் மருத்துவ இடம் கிடைத்திருக்கும் என்று கோவிந்தராஜ் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு இட ஒதுக்கீடும் 50 சதவிகிதத்தை மிஞ்சக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு சட்டம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே 69% இடஒதுக்கீடு அரசியல் சட்ட விரோதம் என அறிவிப்பதுடன் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த அளவை மீறி இட ஒதுக்கீடு அளவை நிர்ணயிப்பது மாநில அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என அறிவிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர் இந்த ஆண்டிலேயே மருத்துவப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட உத்தரவிடுமாறும் மனுவில் கேட்கப்பட்டுள்ளது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close