[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

தாய் யானை உயிரிழக்க காரணமான குட்டி யானையின் பாசம்

mother-elephant-dead-in-erode-district-by-fall-into-bunker

ஈரோடு மாவட்டத்தில் பள்ளத்தில் சிக்கிய தாய் யானையை நெருங்க விடாமல் குட்டியானை தடுத்ததால் அதைக் காப்பாற்ற முடியாமல் போனது. இதனால் தாய் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுசீலா என்பவரின் விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் குடிக்க வந்த யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது. 20 வயது மதிக்கத்தக்க அந்த யானையை மீட்க வனத்துறையினர் முயற்சி செய்தனர்.

ஆனால், அந்த யானையை பிரிந்த அதன் குட்டியானை, அந்த பகுதியில் யாரையும் வரவிடாமல் துரத்தியது. தாய் யானையை யாரும் நெருங்கக் கூடாது என்ற பாசத்துடன் அந்த பள்ளத்தை சுற்றி வந்த குட்டியானையால், தாய் யானையை மீட்பதில் சிக்‌க‌ல் நீடித்தது. ஆறு மணி நேரமாக முயற்சித்தும் தாய் யானையின் அருகில் போக முடியாத நிலையில், தாய் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close