[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

ஜெயலலிதாவின் மணல் சிற்பத்திற்கு எதிரான வழக்கு: பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

jayalalithaa-s-sand-sculpture-case-responding-to-the-district-collector

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றக்கோரிய வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

நாகர்கோவில் வடசேரி பகுதியில் அதிமுக மாவட்ட செயலாளர் விஜயகுமார் வைத்துள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக மகேஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மணல் சிற்பம் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால், மணல் சிற்பத்தை அகற்ற உத்தரவிடுமாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, மனு மீது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close