[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

மாநி‌ல அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: ஆதார் சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது அதிமுக கோரிக்கை

admk-seeks-few-corrections-in-aadhar-bill

அரிசி, மண்ணெண்ணெய், உரம் போன்றவற்றை நேரடி மானியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் ஆதார் சட்ட மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், சில திருத்தங்களை முன்வைத்தார். ஆதார் திட்டத்தின் மூலம் பயனாளர்களை தேர்வு செய்யும் அனைத்து திட்டங்களையும் மாநில அரசுகளின் மூலமாகவே செயல்படுத்த வேண்டும் என்றும், எந்தெந்த திட்டங்கள் என்பதை தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுகளுக்கு வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆதார் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வேண்டும் என்று அவர் கோரினார். சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு மாநில அரசுகளின் பொறுப்பில் இருப்பதால், தேவை ஏற்படும் போது குறிப்பிட்ட நபர் தொடர்பான விவரங்களை பகிரங்கப்படுத்தும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close