[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

தஞ்சைக்கு வராது எய்ம்ஸ்

aiims-will-not-be-built-in-tanjore

தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சாதகமாக இருந்ததால் மத்திய அரசுக்கு தஞ்சை செங்கிப்பட்டியை பரிந்துரைத்ததாகக் கூறினார். ஆனால், மத்திய குழு அந்த இடத்தை நிராகரித்துவிட்டதாகக் தெரிவித்தார். எனவே 5 இடங்களை பரிந்துரைத்து அதில் ஏதாவது ஒன்றில் எய்ம்ஸ் அமைக்க வலியுறுத்தியிருப்பதாகவும்‌ முதலமைச்சர் கூறினார். தஞ்சை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

முன்னதாக செங்கல்பட்டு, மதுரை, பெருந்துறை உள்ளிட்ட 5 இடங்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது, எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த 5 இடங்களில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தாலும் மகிழ்ச்சி என்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close