[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

ஆசைக்கு இணங்க மறுப்பு: அண்ணியை கொன்றவனுக்கு ஆயுள்!

cuddalore-judgement

அண்ணியை கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மனைவி செல்வராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பிரகாஷ் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். செல்வராணி தனது மகள்களுடன் கிராமத்தில் வசித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷின் தம்பி கருணாமூர்த்திக்கும், செல்வராணிக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை பிரகாஷ் கண்டித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி செல்வராணியின் வீட்டிற்குள் கருணாமூர்த்தி நுழைந்துள்ளார். அப்போது, செல்வராணிக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கருணாமூர்த்தி செல்வராணியை தாக்கினார். மயங்கி விழுந்த அவரை, தலையணையால் அழுத்தி கொன்றார் கரூணாமூர்த்தி. இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி செல்வம், கருணாமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Judgement cuddalore
Advertisement:
Advertisement:
[X] Close