[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

விவசாயிகளுக்கு ஆதரவு: 2 மணி நேரம் பேருந்துகள் நிறுத்தம்

to-farmer-protest-supports-2-hours-buses-block

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இந்தப் போராட்டம் நடந்தது.

தஞ்சாவூர் நகர பணிமனையில் அதிகாலை சுமார் 2 மணி நேரம் பேருந்துகள் இயங்காமல் வாயில் முன்பு முற்றுகை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல் தேதியே ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதே போன்று விழுப்புரத்திலும் அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பனிமனைகளிலிருந்து பேருந்துகள் சில மணி நேரம் தா‌மதமாகப் புறப்பட்டு சென்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close