முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் மகன் விவேக், வருமான வரித்துறை முன்பாக இன்று மீண்டும் ஆஜராகிறார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் மகனான விவேக்கின் வீடு, நந்தனத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு சொத்து ஆவணங்கள், செல்போன்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மேலும், 16 கோடி ரூபாய்க்கான வருமானத்தை மறைத்ததை அதிகாரிகளிடம் விவேக் ஒப்புக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 23-ஆம் தேதி வருமான வரித்துறை முன் ஆஜராக விவேக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் வருமான வரித்துறை முன் ஆஜராவதை தவிர்த்து வந்த விவேக் ஒரு வாரத்திற்கு பின் நேற்று ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் குடும்பச் சூழல் காரணமாகத்தான ஒருவாரமாக ஆஜராக இயலவில்லை என விவேக் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் ஆஜராகுமாறு விவேக்கிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே இன்று ஆஜராவார் எனத் தெரிகிறது
#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை
அப்போதும் இப்போதும் அதே "ஸ்டைல்": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்
தனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி!
'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்
நேர்முகத்தேர்வில் மோசடியா?: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி