[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற டி.எஸ்.பி லஞ்சம்?: வீடியோ ஆதாரம் வெளியீடு

dgp-gets-bribery-video-evidence-relased

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற டி.எஸ்.பி சண்முக சுந்தரம் லஞ்சம் பெற்றார் என புகார் எழுந்துள்ளது.

பழனி அடிவாரம் பகுதியில், சாது தர்மானந்த சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதனை அறக்கட்டளை நிர்வாகிகளான வழக்கறிஞர் மணிகண்டன், வெங்கடாசலம், கார்த்திக்குமார் என்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மற்றொரு தரப்பினர் இதற்கு சொந்தம் கொண்டாடி பழனி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

இதில் மணிகண்டன் தரப்பினருக்கு சாதமாக தீர்ப்பு வந்த நிலையில், அதனை நிறைவேற்ற டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் லஞ்சம் பெற்றார் என புகார் எழுந்துள்ளது. இதற்கு ஆதாரமாக வீடியோ காட்சி ஒன்றையும் வழக்கறிஞர் மணிகண்டன் தரப்பினர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்க டிஎஸ்பியை தொடர்புகொள்ள முயன்றபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close