[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

transport-workers-protest-in-bus-depot

போக்குவரத்தை கழகத்தின் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கக்கூறி சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் பேருந்து பணிமனைகளில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதத்தோடு முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தி ஊதிய ஒப்பந்த கூட்டமைப்பின் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பழைய பேருந்துகளை பயன்படுத்தாமல், புதிய பேருந்துகளை வாங்கவேண்டும் என்றும், தரமற்ற பேருந்துகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஊழியர்களைத் தண்டிப்பதையும், அபராதம் விதிப்பதையும் தடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close