[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

ஊனம் மரணத்தை விட மோசமானது... விளையாட்டு வீரருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி உத்தரவு

madras-high-court-hikes-relief-from-rs-3-48-lakh-to-rs-30-lakh-to-differently-abled-man

சாலை விபத்தில் நிரந்தர ஊனத்திற்கு ஆளான விளையாட்டு வீரருக்கு இழப்பீட்டு தொகையை 30 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்தால் ஏற்படும் நிரந்தர ஊனம் என்பது மரணத்தை விட மோசமானது எனவும் உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பிரேம்குமார் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி சாலை விபத்தில் அரசுப்பேருந்து மோதி இடது காலை இழக்க நேரிட்டது. இந்த வழக்கை விசாரித்த ‌மாவட்ட விரைவு நீதிமன்றம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 947 ரூபாயை பிரேம்குமாருக்கு வழங்க உத்தரவிட்டது.

இதனை உயர்த்தி வழங்கக் கோரி பிரேம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், விபத்தால் ஏற்படும் நிரந்தர ஊனம் மரணத்தை விட மோசமானது என சுட்டிக்காட்டி, இழப்பீட்டுத் தொகையை 30 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close