[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

வி.கே.சசிகலாவை தேர்ந்தெடுக்க தடை கோரும் வழக்கு... உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

chennai-highcourt-adjourned-sasikala-case

அதிமுக பொது செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்ந்தெடுக்க தடைவிதிக்கக்கோரும் வழக்கு தொடர்பான விசாரணையை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற‌ம் ஒத்திவைத்தது.

அதிமுக பொது செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்ந்தெடுக்க தடைவிதிக்க கோரி, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிமுக சார்பில் வாதாடிய ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சசிகலா புஷ்பா கடந்த செப்டம்பர் மாதமே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும், அவருக்கு கட்சி விவகாரங்களில் தலையிடும் உரிமையில்லை என்றும் தெரிவித்தார். மேலும் சசிகலா புஷ்பாவும், லிங்கேஸ்வர திலகமும் தொடர்ந்த வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதனிடையே, அதிமுகவை நிர்வகிப்பதில் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும், வி.கே சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதால், அவரை பொதுச்செயலாளராக அறிவிக்கக்கூடாது என்றும் சசிகலா புஷ்பா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த அதிமுக தரப்பு வழக்கறிஞர் அதிமுக துணை விதிகளில் மாற்றம் செய்யப்படமாட்டாது என்றும், பொதுக்குழு சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் எனக் கூறினார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close