[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் அரசியல் இல்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

no-politics-in-chief-secretary-house-raid-pon-radhakrishnan

தமிழக தலைமைச் செலயாளர் வீட்டில் வருமான வரித்துறை மேற்கொள்ளும் சோதனையில் அரசியல் எதுவுமில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் தங்கள் வேலையை மட்டுமே செய்வதாகவும், இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சோதனை குறித்து கருத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை தங்களுக்கு கிடைத்த தகவலின் படியே சோதனை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close