[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம்

chief-minister-panneerselvam-meets-pmmodi

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக ஒ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமரிடம் தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதி வழங்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தவுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது தொடர்பான கோரிக்கையை பிரதமரிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன் வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழுஉருவ வெண்கலச் சிலை அமைக்க வலியுறுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வர்தா புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்க ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியிடம் வலியுறுத்த உள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கச்சத்தீவு திருவிழாவிற்கு மீனவர்களை அனுமதிக்க வலியுறுத்தல் உள்ளிட்ட தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் அளிப்பார் என்றும், இன்றே அவர் சென்னை திரும்புவார் என்றும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close